Online MBA in Sweden - இலவசக்கல்வி - ஏனைய படிப்புகளின் Admissions at Blekinge Institute of Technology - பிப்ரவரி 1 இணையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் - பிப்ரவரி 15 , சான்றிதழ்களின் நகல்களை அனுப்பக் கடைசி நாள் - தரமானக் கல்வி - கடுமையான பாடத்திட்டம் - ஒருவருடப் படிப்பு

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

சுவீடனில் மேற்படிப்பு படிக்க கல்விக்கட்டணம் கிடையாது.

இந்தியாவில் இருந்து வரும் பொறியியற்/தொழிநுட்ப/அறிவியல் மாணவர்கள் IELTS/TOEFL போன்ற ஆங்கிலத் தேர்வுகள் எழுதத்தேவை இல்லை.

மேலும் அதிக தகவல்களுடன் விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஆயுதபூஜை புண்ணியத்தில் பெயர்பலகை ஜொலித்துக்கொண்டிருந்தது. கடை முதலாளி பொன்னுச்சாமி கல்லாவில் கடுகடுவென உட்கார்ந்திருந்தார்.

”அண்ணே, அந்த பழய தோசமாவ என்ன செய்ய..?“ கடை ஊழியன் கேட்டான்.

”ஆங், என் தலைல ஊத்து. கேக்குறாம்பாரு கேள்வி கோட்டிப்பய, போயி கண்ணாயிரம் வீட்ல குடுரா. வழக்கமா செய்ற வேலயக்கூட கேட்டுக்கேட்டுதான் செய்றாங்கெ….“ பொன்னுச்சாமி பொங்கினார்.

”என்னணே, காலைலயே ரொம்ப கோவமா இருக்கிய…. “ வெங்காயக்கடை மாரியப்பன் உள்ளே வந்தார்.

“வா மாரியப்பா, ஏங்கேக்குற.. நம்ம குட்டையன் போனதுல இருந்தே ஒரே கொழப்படியாத்தான் இருக்கு….”

குட்டையன், பொன்னுச்சாமி கடையில் கடந்த ஆறு வருடமாக வேலை பார்த்து வந்தவன். சப்ளையராக கடைக்குள் நுழைந்து, கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறி இன்று அவன்தான் சகலமும். அங்கே அவனுக்கு தெரியாத வேலை எதுவுமே கிடையாது. பொன்னுச்சாமியே இல்லையென்றால் கூட அவனே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வான். தொழிலில் சுறுசுறுப்பும், நிறைந்த நேர்மையும் தான் இந்த குருகிய காலத்தில் இவனை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.

“இவன் நல்லாத்தான்யா இருந்தான். திடீர்னு அவன் ஊர்க்காரப்பய ஒருத்தன் வந்துதான வெனைய வச்சிட்டான். நீ ஏன் இங்கன சுத்துற, மெட்ராசுக்கு வா உனக்கு ஆறாயிரம் சம்பளம் வாங்கித்தரேன்னு சொல்லி இழுத்துட்டு போயிட்டான். அவனுக்கு என்னயா கொறவச்சேன். தீவாளி பொங்கலுக்கு போனசு, நல்லது பொல்லதுனா துனிமனி, வொடம்பு சரியில்லைனா மருந்துனு அவன குடும்பத்துல ஒருத்தனாத்தான பாத்தேன். அதுக்குமேல நாம என்னய்யா செய்யமுடியும்….”

“சரி விடுங்கணே… ஒரு நல்ல மாஸ்டர் கெடச்சா சரியாபோகும்…. ” மாரியப்பன் தேற்ற முயன்றார்.

“இல்ல மாரியப்பா மூனு நாளு மூனு மாஸ்டர் மாத்திட்டேன், ஒருத்தனும் உருப்படியில்ல. புரட்டா சுத்த தெரியாதவன்லாம் மாஸ்டருனு சொல்லிகிட்டு திரியிறாங்கெ… நீ எதாவது மாஸ்டர் இருந்தா சொல்லியனுப்பு….” பொன்னுச்சாமி புலம்பி முடித்தார்.

”அப்பா, அம்மா பணம் வாங்கிட்டு வரச்சொன்னாங்க…. “ லிங்கம் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.

“வாங்க இன்ஜினீரு, எப்டி இருக்கிய… பாத்து ரொம்ப நாளாச்சு, லீவுக்கு வந்தியலா…?“ மாரியப்பன் புன்னகையை வீசினார்.

“ஆமண்ணே, சும்மா ஒரு வாரம்….” வணக்கம் வைத்து முடித்துவிட்டு கிளம்பினான் லிங்கம்.

“தம்பி, இப்ப எங்கண்ணே இருக்காப்ல….” பொன்னுச்சாமியிடம் திரும்பினார் மாரியப்பன்.

“மெட்ராசுலதான் மூனு வருசமா இருந்தான், இப்ப பெங்களூருல ஒரு பெரிய கம்பேனில வேலை கிடச்சிருக்கு. இங்க வாங்குறதவிட ரெண்டு மடங்கு அதிகமா தரேன்னு சொன்னதால அஙக சேரப்போறான். அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருகிறதால இங்க வந்திருக்கான்….”

”அப்படியா, ரொம்ப சந்தோசம்ணே, நேரமாச்சு நாங்கெளம்புரண்ணே….”

”சரிப்பா….” தெத்துப்பல் தெரிய வழியனுப்பிய பொன்னுசசாமியின் முரணை நினைத்துக்கொண்டே சைக்கிளை கிளப்பினார் மாரியப்பன்.

                                        ******

இக்கதையை எழுதியவர் பா.பெரியசாமி periasamy.p@gmail.com

கார்த்தியை அந்த பிள்ளையார் கோவிலின் மதிலின் அருகே பார்த்த பொழுது முதன்முறையாக ஜெனிநடுங்கிப்போனாள். கார்த்தியின் ஒவ்வொரு அசைவுகளும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்த நாட்கள் எப்படி மாறிவிட்டன.அவனைப் பார்த்ததும் தன்
கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை இறுக்கமாக பிடித்துக்கொண்டே “கார்த்தருக்கு தோத்திரம்” என முணுமுணுத்துக்கொண்டே வேகமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய அவளை பின் தொடர்ந்த கார்த்தி

“வா போயிடலாம், ஜெனி, உனக்காக இங்கேயே காத்திருப்பேன்” என்று சொன்னது மட்டும் அவள் காதில் விழுந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரிடம் ரிவர்ஸ் ஸ்வீப் என்ற பதத்தை சிலகாலம் முன்பு வரை உபயோகித்தால், அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்  தோற்றுப்போனது நினைவுக்கு வந்து தொலையும். அந்தக் காலத்தில் சற்றுக் கடினமான வெற்றி இலக்கான 254 எடுத்தால் வெற்றி என்று ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்து, இங்கிலாந்து துடிப்பாக இலக்கைத் துரத்திக் கொண்டிருக்கையில் , 135/2 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைவர் அலன் பார்டர் பந்து வீச வருகிறார். ஆஹா,அல்வா மாதிரியான பந்துவீச்சு என குதுகலத்துடன் மைக்கேட்டிங் ரிவர்ஸ் ஸ்வீப் வகையில் ஆட , மட்டையில் பட்டு பந்து , மேலே எழும்பி நேராக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது.

தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும்