ஆயுதபூஜை புண்ணியத்தில் பெயர்பலகை ஜொலித்துக்கொண்டிருந்தது. கடை முதலாளி பொன்னுச்சாமி கல்லாவில் கடுகடுவென உட்கார்ந்திருந்தார்.
”அண்ணே, அந்த பழய தோசமாவ என்ன செய்ய..?“ கடை ஊழியன் கேட்டான்.
”ஆங், என் தலைல ஊத்து. கேக்குறாம்பாரு கேள்வி கோட்டிப்பய, போயி கண்ணாயிரம் வீட்ல குடுரா. வழக்கமா செய்ற வேலயக்கூட கேட்டுக்கேட்டுதான் செய்றாங்கெ….“ பொன்னுச்சாமி பொங்கினார்.
”என்னணே, காலைலயே ரொம்ப கோவமா இருக்கிய…. “ வெங்காயக்கடை மாரியப்பன் உள்ளே வந்தார்.
“வா மாரியப்பா, ஏங்கேக்குற.. நம்ம குட்டையன் போனதுல இருந்தே ஒரே கொழப்படியாத்தான் இருக்கு….”
குட்டையன், பொன்னுச்சாமி கடையில் கடந்த ஆறு வருடமாக வேலை பார்த்து வந்தவன். சப்ளையராக கடைக்குள் நுழைந்து, கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறி இன்று அவன்தான் சகலமும். அங்கே அவனுக்கு தெரியாத வேலை எதுவுமே கிடையாது. பொன்னுச்சாமியே இல்லையென்றால் கூட அவனே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வான். தொழிலில் சுறுசுறுப்பும், நிறைந்த நேர்மையும் தான் இந்த குருகிய காலத்தில் இவனை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.
“இவன் நல்லாத்தான்யா இருந்தான். திடீர்னு அவன் ஊர்க்காரப்பய ஒருத்தன் வந்துதான வெனைய வச்சிட்டான். நீ ஏன் இங்கன சுத்துற, மெட்ராசுக்கு வா உனக்கு ஆறாயிரம் சம்பளம் வாங்கித்தரேன்னு சொல்லி இழுத்துட்டு போயிட்டான். அவனுக்கு என்னயா கொறவச்சேன். தீவாளி பொங்கலுக்கு போனசு, நல்லது பொல்லதுனா துனிமனி, வொடம்பு சரியில்லைனா மருந்துனு அவன குடும்பத்துல ஒருத்தனாத்தான பாத்தேன். அதுக்குமேல நாம என்னய்யா செய்யமுடியும்….”
“சரி விடுங்கணே… ஒரு நல்ல மாஸ்டர் கெடச்சா சரியாபோகும்…. ” மாரியப்பன் தேற்ற முயன்றார்.
“இல்ல மாரியப்பா மூனு நாளு மூனு மாஸ்டர் மாத்திட்டேன், ஒருத்தனும் உருப்படியில்ல. புரட்டா சுத்த தெரியாதவன்லாம் மாஸ்டருனு சொல்லிகிட்டு திரியிறாங்கெ… நீ எதாவது மாஸ்டர் இருந்தா சொல்லியனுப்பு….” பொன்னுச்சாமி புலம்பி முடித்தார்.
”அப்பா, அம்மா பணம் வாங்கிட்டு வரச்சொன்னாங்க…. “ லிங்கம் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
“வாங்க இன்ஜினீரு, எப்டி இருக்கிய… பாத்து ரொம்ப நாளாச்சு, லீவுக்கு வந்தியலா…?“ மாரியப்பன் புன்னகையை வீசினார்.
“ஆமண்ணே, சும்மா ஒரு வாரம்….” வணக்கம் வைத்து முடித்துவிட்டு கிளம்பினான் லிங்கம்.
“தம்பி, இப்ப எங்கண்ணே இருக்காப்ல….” பொன்னுச்சாமியிடம் திரும்பினார் மாரியப்பன்.
“மெட்ராசுலதான் மூனு வருசமா இருந்தான், இப்ப பெங்களூருல ஒரு பெரிய கம்பேனில வேலை கிடச்சிருக்கு. இங்க வாங்குறதவிட ரெண்டு மடங்கு அதிகமா தரேன்னு சொன்னதால அஙக சேரப்போறான். அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருகிறதால இங்க வந்திருக்கான்….”
”அப்படியா, ரொம்ப சந்தோசம்ணே, நேரமாச்சு நாங்கெளம்புரண்ணே….”
”சரிப்பா….” தெத்துப்பல் தெரிய வழியனுப்பிய பொன்னுசசாமியின் முரணை நினைத்துக்கொண்டே சைக்கிளை கிளப்பினார் மாரியப்பன்.
******
இக்கதையை எழுதியவர் பா.பெரியசாமி periasamy.p@gmail.com
கார்த்தியை அந்த பிள்ளையார் கோவிலின் மதிலின் அருகே பார்த்த பொழுது முதன்முறையாக ஜெனிநடுங்கிப்போனாள். கார்த்தியின் ஒவ்வொரு அசைவுகளும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்த நாட்கள் எப்படி மாறிவிட்டன.அவனைப் பார்த்ததும் தன்
கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை இறுக்கமாக பிடித்துக்கொண்டே “கார்த்தருக்கு தோத்திரம்” என முணுமுணுத்துக்கொண்டே வேகமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய அவளை பின் தொடர்ந்த கார்த்தி
“வா போயிடலாம், ஜெனி, உனக்காக இங்கேயே காத்திருப்பேன்” என்று சொன்னது மட்டும் அவள் காதில் விழுந்தது.
ரம்யாவிற்கு வருத்தமோ கோபமோ இருப்பது தெரிந்தால் நான் செய்யும் முதற்காரியம், அவளை வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தான். அதிகாலையிலேயே எழுந்து எங்களது அலுவலக நண்பர்களின் வருகைக்காக பலவகையான கூட்டுக்களுடன் மதிய உணவைத் தயாரித்து வைத்திருந்து , உறுதியளித்திருந்த படி சிலர்
வராததுதான் ரம்யாவின் வருத்ததிற்குக் காரணம்.
ரம்யாவிற்கு உணவு மீதமானாலோ, யாராவது அதிகமாக தட்டில் போட்டுக்கொண்டு அதை சாப்பிடாமல் போனாலோ அத்தனை கோபம் வரும். சின்ன வயசில அரைவயிறு கால்வயிறு சாப்பிட்டிருந்தால் சாப்பாட்டோட அருமை தெரியும் என அடிக்கடி என்னிடம் சொல்லுவாள்.
சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் “நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை”
“ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?”
“கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம், ராப்பகலா கஷ்டப் பட்டது நாம… தாங்க்ஸ்
கடவுளுக்கு, இதை வேறயாராவது செய்து இருந்தா ஒன்னுமே தெரிஞ்சுருக்காது, சீர்திருத்தவாதி மாதிரி பேசிட்டு இப்படி செய்றதை ஜீரணிச்சுக்க முடியல”
தொடர்ந்து படிக்க இங்கு சொடுக்கவும்
காஞ்சிபுரத்தில் ரம்யாவின் அம்மா வைத்திருந்த அரதப்பழசான , உபயோகமில்லாத தையல் எந்திரத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாது என நான் சொன்னதால் கோபித்துக்கொண்ட என் மனைவி ரம்யா , மாலை என் அலுவலக நண்பர் சுந்தரலிங்கத்தின் திருமணவரவேற்புக்கு வரமுடியாது என சொல்லிவிட்டதால் எனது மேலாளர் மோகனுடன் செல்ல வேண்டியதாயிற்று.
“அந்த தையல் மெஷின் இல்லேன்னா, இந்த ரம்யா கிடையாது.. என் எஞ்சினியரிங் டிகிரி கிடையாது… நான் உனக்கு கிடைச்சிருக்கவே மாட்டேன்” என்ற அவளின் அழுகை விசும்பலுடன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருக்க
நான், மோகனுடன் சுந்தரலிங்கத்தின் திருமண வரவேற்பு நடக்கும் மண்டபத்தினுள் நுழையும்பொழுதே மோகனின் கால்கள் தாளம் போட ஆரம்பித்துவிட்டன. மணமக்கள் அமரும் இடத்திற்கு வலப்பக்கமாக இசைக்குழுவினர் சில மெட்டுக்களை அடித்து தயாராகிக் கொண்டிருந்தனர்.